பக்கம் எண் :


393


பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் - கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள் உடைத் தடவில் புள் ஒலித்து - கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன கௌவை ஆகின்றது - நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோர் அறன் இலர் என்றலர் சிறந்த - அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; இன் உயிர் கழியினும் நனி இன்னாது - அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்! எ - று.

     (வி - ம்.) அன்னோ: இரக்கச்சொல். தடவு - சாடி; பானையுமாம். புள் - வண்டு. படுதல் - ஒலித்தல். இஃது ஈரமில்கூற்றம் ஏற்றலர் நாணல்.

     அறிந்தோரெனப்படுவார் களவுதீதென்பதறியாரோ? அஃதறியாராயின் அவர் எவ்வாறு அறனுடையவராவார்? ஆதலின் அவர் அறனிலரே என்று அலர்தோன்றியது உரைத்தாளென்பது. தலைமகள் தன் காதலர் அறனிலர் எனப் பிறர்கூறக்கேட்டலின் அது பொறாது, இறந்துபடுமெனவும், அலரேயன்றி அப்பழியும் நின்னைவந்து சூழுமெனவுங்கூறி வரைவுடன்படுத்தினா ளாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுமுடுக்கல் இது, கருப்பொருளால் நெய்தல்.

     (பெரு - ரை.) "கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்'' என்பது பற்றி உயிர்கழியினும் இன்னாது என்றாள். கானல் கூறினமையின் முதற்பொருளாலேயே இது நெய்தல் ஆதலறிக.

(227)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்த தலைமகன் கேட்டு, விரைவிலே மணம் புரிந்துகொள்ளும் ஆற்றானே, தோழி தலைமகளை நோக்கித் தோழி! இனி மலைகிழவோன் நம்மைக்கூடித் தலையளி செய்யானோ? மற்று அவன்தான் இங்கு வாராதிருப்பது என்ன காரணமென்று கருதப்படுமென அழிந்துகூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் மேலைச் செய்யுள் விதியே யமையும்.

    
என்னெனப் படுமோ தோழி மின்னுவசிபு 
    
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக்