(து - ம்.)என்பது, தலைவன் பிரியக்கருதிய தறிந்த தோழி தலைவியிடங் கூறலும், தலைவி அவரை இன்றியமையாத என்னை வருந்தும்படி விட்டுப் பிரிகின்ற அன்னதொரு குணக்குறைபாடு இலரெனத் தலைவனைப் புகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை,
| "அவனறி வாற்ற அறியு மாகலின |
| ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் |
| உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் |
| பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும்" |
(தொல். கற்.
எனவரும் விதியின்கண் "ஏற்றற்கண்ணும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| நின்ற சொல்லரநீடுதோன் றினியர் |
| என்றும் என்றோள் பிரிபறி யலரே |
| தாமரைத் தண்டா தூதி மீமிசைச் |
| சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் |
5 | புரைய மன்ற புரையோர் கேண்மை |
| நீரின் றமையா வுலகம் போலத் |
| தம்மின் றமையா நந்நயந் தருளி |
| நறுநுதல் பசத்த லஞ்சிச் |
| சிறுமை உறுபவோ செய்பறி யலரே. |
(சொ - ள்.) நின்ற சொல்லர்-தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நீடு தோன்று இனியர் - நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; என்றும் என் தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; புரையோர் கேண்மை - அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீம் தேன் போல மன்ற புரைய - தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத்
(பாடம்) 1. | நின்ற சொல்லொடு. 2. | நீடு தோறினியர | |