(து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வரக்கண்டும் அவன் வாராமையைக் கருதிய தலைவி மேகத்தை நோக்கி, "மேகமே, அவர்நிலையைக் கூறக்கேளென்று நீ இங்கு வருதல் சால்புடையதன்று கண்டாய், நின்குரல் பாம்பின் படத்தை மழுங்கச் செய்வதன்றி அவர் நெஞ்சைக் கனியச் செய்யாமையின் இனிய வல்ல மன்"னென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.
| வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங் |
| கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப |
| வண்டுவாய் திறப்ப விண்ட பிடவ |
| மாலை அந்தி மாலதர் நண்ணிய |
5 | பருவஞ் செய்த கருவி மாமழை |
| அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல் |
| சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்றுடன் |
| உரவுரும் உரறு நீரின் பரந்த |