பக்கம் எண் :


410


    
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட 
5
கனியா நெஞ்சத் தானும் 
    
இனிய அல்லநின் இடிநவில் குரலே. 

     (சொ - ள்.) வறம் கொல வீந்த கானத்துக் குறும் பூங்கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப - கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டு வாய்திறப்ப விண்டபிடவ அந்திமாலை - வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; மால் அதர் நண்ணிய பருவம் செய்த கருவி மாமழை - யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; அவர்நிலை ஈங்கு அறி என வருதல் - நீ "அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள்" என்று வருதல்; சான்றோர்ப் புரைவது அன்று - சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; உடன் மான்று நின் இடி நவில்குரல் உரவு உரும் உரறும் நீரின் - ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரந்த பாம்பு பைமழுங்கல் அன்றியும் - பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாண்ட கனியா நெஞ்சத்தானும் இனிய அல்ல - மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல; எ - று.

     (வி - ம்.)வறம் - கோடை. மோ : முன்னிலையசை. பிடவு இலையுதிர்த்துத் தூர்தெரியாதபடி பூத்தலால் பட்ட கானத்தைப் பூச்சூடிய மகளிரை யுவமித்தார்.

     அவரை உடனழைத்து வருதலின்றி அவர் நிலையை நீ யறிவையோ எனக் கூறுதலால் என் காமநோயை நீக்குந் தன்மையைக் கருதுகின்றிலை யாதலின் சான்றோர் செய்கையை நின் செய்கை ஒவ்வாதென்றாள்; சான்றோர் செய்கை "பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி அறனறிதல், சான்றோர்கட் கெல்லாங் கடன்" (கலி. 139) என்றதனாலறிக. குறித்த பருவத்து வாராது தாழ்த்தமையின் பாம்பின் நஞ்சுடைத் தலையினும் அவர் நெஞ்சங் கொடிதென்பாள் கனியா நெஞ்சத்தானுமென்றாள்.

     மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) நின்குரல் கேட்டும் எம்பெருமான் கனியா நெஞ்சம் உடையராதலான் நீ எனக்கு இனியை யல்லை நின்குரல் பாம்பு முதலிய சிற்றுயிர்களை வருத்துவதே யன்றி எம் போல்வார்க்கு இனிய வல்லகாண் என்றவாறு. உரவு - வலிமை. உரும் - இடி. நீரின் - நீர்மையாலே. பரந்த பை என இயைத்தலுமாம்.

(238)