பக்கம் எண் :


411


  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது

.
     (து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் ஓரிடத்தில் வந்து மறைந்திருப்பதை யறிந்த தோழி தங்களுக்குண்டாகிய பழிச்சொல்லை அவன்கேட்டு விரைய வரைந்து கொள்ளுமாற்றானே "யாம் இதுகாறும் சேர்ப்பனுக்குப் பொருந்தி நடந்துகொண்டோ மில்லை; அங்ஙனமாக இப்பொழுதே எம்மை நோக்கி "அக்காதலனை யணைத்து முயங்குவாய்" என்று கூறுகின்ற இவ்வூர் யாம் ஏதாவது களவொழுக்கத்துக்கு உரியதைச் செய்துவிட்டால் இனி என்ன பாடுபடுமோ" வென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .................... அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாற் கொள்க.

    
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய 
    
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் 
    
இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி 
    
அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் 
5
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின் 
    
ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு நெய்தற் 
    
புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் 
    
மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு 
    
அமைந்துதொழில் கேட்டன்றோ இலமே முன்கை 
10
வார்கோல் எல்வளை உடைய வாங்கி 
    
முயங்கெனக் கலுழ்ந்த இவ்வூர் 
    
எற்றா வதுகொல்யா மற்றொன்று செயினே. 

     (சொ - ள்.) ஞான்ற ஞாயிறு குடமலை மறைய - மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் - மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி - தாம் வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் காமர் சிறுகுடி - ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம் வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல் நெறி வழியின் ஆய்மணி பொதி அவிழ்ந்து ஆங்கு - செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை