பக்கம் எண் :


412


விரித்துப் பரப்பினாற்போல; நெய்தல் புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் - நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு - வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; அமைந்து தொழில் கேட்டன்று இலம் - யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; முன் கை வார் கோல் எல் வளை உடைய வாங்கி முயங்கு என - அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; கலுழ்ந்த இவ் ஊர் - புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் மற்றொன்று செயின் எற்று ஆவது கொல் - யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ? எ - று.

     (வி - ம்.) வரைந்துகொண்டு அவற்குக் குற்றேவலிழைக்கும் பயனைப்பெற்றேம் இல்லையேயென்றிரங்குவாள் தொழில் கேட்டன்றோவிலமே யென்றாள். அவனொடு கூட்டமுண்மையை ஊரறிந்ததென அறிவுறுத்துவாள் வாங்கி முயங்கென இவ்வூர் கலுழ்ந்ததென்றாள். இதனால் இனி வரையாது தாழ்ப்பின், இறந்துபடுவதல்லது வேறு செய்யக் கடவதின்மையும் அதனால் அவன் பழியெய்துகின்ற உண்மையுங் கூறினாளாயிற்று.

     உள்ளுறை :- குடித்து மயங்கிய பரதவர் தாம் பெற்ற பெரிய மீனை எளிதிலே மாறி நெறியிலுள்ள நீலமலரை மிதித்துச் செல்லுவரென்றது, காம மயக்கங் கொண்ட காதலன் தான் அரிய பொருளை எமரிடத்துக் கொடுத்துத் தலைவியைப் பெற்று மணந்து ஊரார் எடுத்த அலரைத் தாழ மிதித்து அடக்கித் தன்னூர் கொண்டு புகுவானாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை.) இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாயபடியாம். மற்றொன்று செயின் என்றது, பகற்குறியே யன்றி இரவுக் குறியும் கூறி அவனை அழைத்து அவன் விரும்பியவாறு ஒழுகுவமாயின் என்றவாறு.

(239)
  
     திணை : பாலை.

     துறை : (1) இது, பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, பிரிவின்கண் மெலிவுற்ற தலைமகள் "என் முயக்கத்தை வெறுத்துச் செல்லுதலால் என்னுடம்பு துயில் கொள்ளாது இடையீடுபடுவதாயினும் அவர் சென்ற காடு மலைபோல அச்சத்தைத் தாரா நின்றது; அதனைப் படைத்த கொடியோன்றானும் அதன் கண்ணே சென்று நனி வருந்துவானாக"வென நொந்து கூறாநிற்பது.