பக்கம் எண் :


413


     (இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

    (2) நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, உள்ளத்தாலே பொருள் கருதப்படுதலும் தலைவியைப் பிரிதல் ஆற்றாத தலைமகன் "நம் காதலியின் முயக்கத்தை வெறுத்துச் செல்லுதலால் என்னுடம்பு துயில் கொள்ளாது இடையீடுபடுவதாயினும் செல்லுங் காடு மலைபோல அச்சத்தைத் தாரா நின்றது; அத்தகைய காட்டினைப் படைத்த கொடியோன் தானும் அதன்கண்ணே சென்று நனி வருந்துவானாக" என வருந்திக் கூறாநிற்பதுமாகும்.

     (வி - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

்்
    
ஐதேகு அம்மஇவ் வுலகுபடைத் தோனே 
    
வையேர் வாலெயிற்று ஒண்ணுதற் குறுமகள் 
    
கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி 
    
ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை ஆகம் 
5
துயிலிடைப் படூஉந் தன்மைய தாயினும் 
    
வெயில் வெய்துஉற்ற பரலவல் ஒதுக்கில் 
    
கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி 
    
ஆன்வழிப் படுநர் பத்தலதோண்டிய 
    
யானை இனநிரை வௌவும 
10
கானந் திண்ணிய மலைபோன் றிசினே. 

     (சொ - ள்.) (துறை. 1) வை ஏர் வால் எயிற்று ஒள்நுதல் குறுமகள் - கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் - நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் - இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயில் வெய்து உற்ற பரல் அவல் ஒதுக்கில் கணிச்சியின் குழித்த கூவல் நண்ணி - வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் - பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை இனம் நிரை வௌவும் - யானை