(து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்கத்து நீட்டித்து வரையாதொழுகுதலும் தலைவி அதனை ஆற்றாளாகி வேறுபட அவ்வேறுபாடறியாத தலைமகனைத் தோழி இன்ன இன்ன காரணங்களால் நினக்கு அவ்வேறுபாடு தோன்றவில்லையெனக் கூறி வரைவுகடாவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| தொடிபழி மறைத்தலின் தோளுய்ந் தனவே |
| வடிக்கொள் கூழை ஆயமோ டாடலின் |
| இடிப்பு மெய்யதொன் றுடைத்தே கடிக்கொள |
| அன்னை காக்குந் தொன்னலஞ் சிதையக் |
5 | காண்டொறுங் கலுழ்த லன்றியு மீண்டுநீர் |
| முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைச் |
| சிறுபா சடைய செப்பூர் நெய்தல் |
| தெண்ணீர் மலரின் தொலைந்த |
| கண்ணே காமங் கரப்பரி யவ்வே. |
(சொ - ள்.) வடிக்கொள் கூழை தொடிபழி மறைத்தலிடுதோள் உய்ந்தன - வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னைப் பிறர் கூறும் பழிச்சொற்கஞ்சி வளைகளைக் கழலாதவாறு செறித்து மறைத்தலாலே தோள்கள் வாட்டந் தோன்றாவாயின!; ஆயமோப் ஆடலின் மெய்யது இடிப்பும் ஒன்று உடைத்து - அன்றியும் தன் ஆயத்தாரோடு விளையாட் டயர்தலால் உடம்பிற் களைப்பும் அவ் விளையாட்டினா லுண்டாகியதென நினைப்பதற் குரியதாயிரா