விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
| கூதிர்க் கூதளத்து அலரி நாறும் |
| மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் |
| மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் |
5 | உயர்மலை நாடற்கு உரைத்தல்ஒன்றோ |
| துயர்மருங்கு அறியா அன்னைக் கிந்நோய் |
| தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ |
| செய்யாய் ஆதலிற் கொடியை தோழி |
| மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த |
10 | செயலை அந்தளிர் அன்னஎன் |
| மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே. |