(து - ம்.)என்பது, அங்ஙனம் மழைமேல் வைத்துப் பருவமறுக்கின்றாள் தலைவர் தாம் கார்ப்பருவத்து வருவேமென்றார்; அதற்குள்ளாக மேகமே நீ இவள்பால் அன்பின்மையால் இடையில் வந்து பெய்யத் தொடங்கி மருட்டிப் பெய்தலையுடைய நின் பொய்நீர்மையை மெய்ந்நீர்மையாகக் கொண்டு மயங்குகின்ற மயிலின்குழாம்போல, யான் மயங்கேனென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்தகிளவி" (தொல். கள. (23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.