(து - ம்.) என்பது, "தலைவி அழகின் கதிர்ப்பு மிகுதலாலே காவலுட்பட்டவள் ஆயினாள், நீ தானும் வெய்யவாகப் பெருமூச் செறியா நின்று என்னுடைய மொழியைக் கேளா வேறுகருதாநின்றனை, இனி வரைந்தாலல்லாது களவொழுக்கம் எங்ஙனம் நிகழ்த்த இசையுமென்று தோழி தலைவனை நோக்கித் தலைவியின் இற்செறிப்பு அறிவுறுத்தி வரைவுகடாவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.................................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாற் கொள்க.
| புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் |
| பள்ளி யானையின் வெய்ய உயிரினை |
| கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து |