நல்லதாகு'மென நெறியினது ஏதங்காட்டி மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே |
| உறுகெழு மரபிற் குறிஞ்சி பாடிக் |
| கடியுடை வியன்நகர்க் கானவர் துஞ்சார் |
| வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை |
5 | கன்முகைச் சிலம்பிற் குழுமு மன்னோ |
| மென்தோள் நெகிழ்ந்துநாம் வருந்தினும் இன்றவர் |
| வாரா ராயினோ நன்றுமற் றில்ல |
| உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
| பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள் |
5 | திருமணி அரவுத்தேர்ந்து உழல |
| உருமுச்சிவந்து எறியும் ஓங்குவரை யாறே. |
(சொ - ள்.) கழுது கால் கிளர ஊர்மடிந்தன்று - பேயினங்கள் விளக்கமுற இயங்காநிற்ப, இவ் விராப்பொழுதெல்லாம் ஊர்முழுதுந் துயில் கொள்ளாநின்றது; உருகெழு மரபின் குறிஞ்சி பாடி வியல்நகர்க் கடியுடைக் கானவர் துஞ்சார் - கேட்போர் அச்சம் பொருந்துதற்குரிய தன்மையுடனே குறிஞ்சியென்னும் பண்ணைப் பாடிக்கொண்டு அகன்ற இவ்வூரைக் காத்தலையுடைய கானவர் யாரும் துயில்வாரல்லர்; வயக்களிறு பொருத வாள் வரி வேங்கை கல் முகைச் சிலம்பின் குழுமும் - வலிய களிற்றியானையொடு பொருத வாள்போலுங் கோடுகளையுடைய புலி துறுகல் மிக்க மலையடியினின்று முழங்கா நிற்கும்; அன்னோ ஓங்கு வரை ஆறு உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் பெயல் கால் மயங்கிய பொழுது கழி பால் நாள் - ஐயோ! ஓங்கிய மலைவழியில் உயர்ந்த மலைப்பக்கத்தில் விளங்கி மின்னி மழை பெய்தலை மயங்கி நிற்கின்ற காலம் நீட்டித்த இரவு நடுயாமத்து; அரவுர்தேர்ந்து திருமணி உழலச் சிவந்து உருமு எறியும் - பாம்பு தன்செவியிற் படுதலும் தன்னிடத்துள்ள அழகிய நீலமணியைக் கக்கி வருந்தி உழலுமாறு சினங்கொண்டு இடி முழங்கி மோதாநிற்கும்; இன்று மெல் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் அவர் வாரார் ஆயின்ஒ நன்று - இப்பொழுது மெல்லிய தோள் தளர்வுற்று நாம் வருந்துவதாயினும் அவர் இங்கு வாராராயிருத்தலே மிக நல்லதாகும்; எ - று.