பக்கம் எண் :


44


    (வி - ம்.)வெள்ளில் - விளாமரம்; வெள்ளில் பயிரிலே பரவுமென்றதனால் தலைமகன் முதுவேனிற் பருவத்துப் பிரிந்தானென்க. அவன் குறித்த பருவம் வருந்துணை ஆற்றியிருத்தல் கற்புடை மகளிர் கடனாதலின், தலைவி உவந்து கூறினாளாயிற்று. இஃது அருண்மிகவுடைமை.

    இறைச்சி :- விளங்கனியே உணவாகவுடையராயிருந்தும் அவை எடுப்பார் மிக்கின்மையாற் பயிரிற் பரவிக்கிடக்குமென்றது செல்லுந் தேத்து ஆண்டுள்ளாரும் பொருள் வேட்கையராயினும், ஈட்டுவார் மிக்கின்மையின் நங்காதலர் அங்கே சென்றவுடன் விரைவிலீட்டுமாறு கிட்டுவதாகு மென்றதாம். எனவே, குறித்த பருவத்துக் காதலர்வருவராதலின் யான் வருந்தேனெனவும் இதனை யறிந்தே நீ அவரைத் தாழ்க்காது விடுத்தனை யெனவும் குறிப்பாற் கூறினாளாயிற்று. கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - உவகை. பயன் - ஆற்றியிருத்தல். இதனைக் கற்பிற் றிரியாமையின் உவகைப்பாற் படுத்துவர் நச்சினார்க்கினியர்; (தொல்-சூ- 147, உரை.)

    (பெரு - ரை.) இதனால் இன்பத்தினுங்காட்டில் தன் கடமையாகிய அறத்தையே பெரிதும் பேணும் தலைவியின் மாண்பு புலனாதல் அறிக.

(24)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைமகளைத் தோழி குறைநயப்புக் கூறியது.

    (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவிபாற்சென்று ஒரு தோன்றல் தினைப்புனத்து நம்மொடு கிளியோப்பித் தன் கருத்தை நிகழ்த்துமிடம் பெறானாகி அகன்றனன்; அவனைக் கண்டு என் தொடிகழல அவற்றைச் செறித்து வந்தேனென்று அவனைத் தன்னுள்ளம் விரும்பினது போலத் தலைவி அதனை ஆராய்ந்து தன்னை விரும்பினன்" எனக் கொள்ளும் வண்ணங் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன  
    
செவ்வரி யிதழ சேணாறு நறவின்1  
    
நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் 
    
பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் 
5
வளமலை நாடன் நெருநல் நம்மொடு 
    
கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச் 
    
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்த 
  
 (பாடம்) 1. 
சேணாறு பிடவியன்.