(து - ம்.) என்பது, வினைவயிற் பிரியுந் தலைமகன் குறித்தபருவத்து வரவேண்டி, "நீயிர் பிரிகின்றனிரெனக் கேட்டலும் இத்தன்மையானாளைக் கண்டு யானும் ஆற்றலேன்" என்று அவன் செலவழுங்குமாறு கூறி இப்பொழுதே இப்படியாயின் நீயிர் மீண்டுவருமளவும் எங்ஙனம் ஆற்றுமென்னுங் குறிப்புத் தோன்றக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்" (தொல்-கற். 9.) என்பதன்கண் பிற என்பதனால் அமைத்துக்கொள்க.
| நோகோ யானே நெகிழ்ந்தன வளையே |
| செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை |
| விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் |
| பிண்ட நெல்லின் தாய்மனை யொழியச் |
5 | சுடர்முழு தெறிப்பத் திரங்கிச் செழுங்காய் |
| முடமுதிர் பலவி னத்த நும்மொடு |
| கெடுதுணை யாகிய தவறோ வையெயிற்றுப் |