பக்கம் எண் :


461


  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி வாயினேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி வாயிலெதிர்கொண்டது.

    உடனிலைக்கிளவிவகையால்.

     (து - ம்.)என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனை இறைமகளுடன் எதிர்கொண்ட தோழி! நின்னைப் பிரிந்து வருந்துவதல்லாமல் நின்னைத் தன்பால் வயமாக்க அறியாத இத் தலைவிபால் வைத்திருக்கும் அன்பினும் என்பால் அன்புடையைதான்; ஆயினும் நீ பிரிந்தது நன்னன் செய்த கூந்தற்கயிற்றினுங்காட்டிற் கொடியதன்றோ? அத் தகுதியை யான் மறப்பேன்காணென்று வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி, இழைத்துஆங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத் 
    
தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து 
    
இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி 
    
உருள்பொலி போல எம்முனை வருந்தல் 
5
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்  
    
பெருந்தோள் செல்வத்து இவளினும் எல்லா  
    
எற்பெரி தளித்தனை நீயே பொற்புடை  
    
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்  
    
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் 
10
கூந்தல் முரற்சியின் கொடிதே 
    
மறப்பன் மாதோநின் விறல்தகை மையே. 

     (சொ - ள்.) எல்லா தடந் தாள் தாழைக் குடம்பை - ஏட! நீ பிரிந்தக்கால் பெரிய தூற்றினையுடைய தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண்ணே! நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் - பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள புன்னை முதலாகியவற்றின் மலரை முடித்தலால் வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தையுடைய இருளொத்த கூந்தலில்; பொங்குதுகள் ஆடி உருள்பொலி போல எம்முனை வருந்தல் அணித்தகை அல்லது - மிக்க துகள்படிய நிலத்திலே புரண்டு சாய்ந்தாற் போலாக எம்முன்னே வருந்துதலையுடையளாகி அழகழிந்த தன்மை யொன்றல்லாது; பிணித்தல் தேற்றாப் பெருந்தோள் செல்வத்து இவளினும் - நின்னை