பக்கம் எண் :


462


வசமாக்குதலைத் தெளியாத பெரிய தோளையுடைய செல்வமகளாகிய இவளினுங்காட்டில்; என் பெரிது நீ அளித்தனை - என்னைப் பெரிதும் நீ அன்பு செய்தொழுகா நின்றனை அங்ஙனமாயினும் நீ பிரிந்து சென்றதானது; பொற்பு உடை விரி உளைப் பொலிந்த பரி உடை நல் மான் வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் - அழகு பொருந்திய விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பிண்டன் முதலாயினோரைப் போரிலே தோற்றோடச் செய்த ஏந்திய வேற்படையையுடைய நன்னன்; கூந்தல் முரற்சியின் கொடிது - தான் அப் பகையரசரின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவர் தலையை மழித்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற்றாலே அப் பகைவரின் யானையைப் பிணித்த கொடுமையினும் கொடியதாயிராநின்றது; நின் விறல் தகைமையே மறப்பன் - ஆதலால் நினது வலிய தகுதிப்பாட்டினை யான் மறந்தே விடுகின்றேன்காண்; எ - று.

     (வி - ம்.) நோன்றல் - பொறுத்தல்; நோனாமை - பொறுக்க முடியாமை. முனை - ஐ: சாரியை. அணித்தகை - அழகைத் தடுப்பது. எல்லா: ஏடவென்னும் முன்னிலைச் சொல். கணவனை வயமாக்க அறியாதாள் வருந்தியென்னென்றதாம். இதனை "பஞ்சிறைகொண்ட" (கேம - 127) என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானுமறிக. முரற்சி - கயிறு. தலைவியுடனெதிர் கொண்டமையால் உடனிலைக் கிளவியாயிற்று. இவளெனக் சுட்டினமையின் உடனின்றமை தெளிக.

    புலவி தீர்க்கும் வாயிலாக யான் அமையாதவழி என்னுடனும் பேசாது வெறுத்தல் செய்வாய் அமைந்தமையால் என்னுடன் பேசுவாயாயினை என்று கொண்டு எற்பெரிதளித்தனை யென்றாள்.

    மெய்ப்பாடு - உவமையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வாயினேர்தல்.

 (பெரு - ரை.) 
"பொங்கு துகள் ஆடி  
  
 உருள்பொறி போல எம்முனை வருதல்  
  
 அணித்தகை யல்லது பிணித்தல் தேற்றா" 

என்றும் பாடவேறுபாடுண்டு. இந்தப் பாடமே சிறப்புடையதுமாகும். இந்தப் பாடம் கிடைக்கப்பெறாமையால் இந்தச் செய்யுட்கு உரையாசிரியர் பெரிதும் இடர்ப்பட்டு உரைகூறியிருத்தலும் அவ்வுரை பொருந்தாமையும் அறிக.

     உருள்கின்ற பொறி போல (இயந்திரம் போல) எமக்கு முன்னரே வருவதன்றி தன் அணித்தகையால் நின்னைப் பிணித்தல் தேற்றா இவளைத் தலையளி செய்யாயாய் உனக்கு வாயில் நேர்விக்கும் என்னை மட்டும் நீ நன்கு அளிசெய்கின்றனை, அதனால் நீ சிற்சில செவ்வியில் வெற்றியும் கண்டனை, நின்னுடைய இவ்விறற்றகைமை நன்னன் கூந்தல் முரற்சியினும் கொடியதாயிருந்தது; ஆதலால் 'நன்றல்லது அன்றே மறப்பது அறன்' என்பது பற்றி நின் தகைமையை நான்