பக்கம் எண் :


469


அழகிய பிணைமான் உராய்ந்து கொள்ளுதலாலே; இழை மகள் பொன் செய் காசின் ஒள் பழம் தாஅம் - கலன் அணிந்த மடந்தை ஒருத்தியின் பொன்னாற் செய்த கலன்களைப் பரப்பினாற்போல ஒள்ளிய பழங்கள் உதிரப்பெற்ற; குமிழ் தலை மயங்கிய குறும் பல் அத்தம் - குமிழ் மரங்கள் நிரம்பிய குறிய பல வழியையுடைய சுரத்து நெறியிலே; பொம்மல் ஓதி எம்மொடு வருதியோ எனக் கூறின்றும் உடையர் - செறிந்த கூந்தலையுடையாய் நீ எம்முடன் வருகின்றனையோ? என்று கூறிய சொல்லையும் உடையர் காண்; ஆதலின் அந்நெறி மழைபெய்தலான் நலனுடையதா யிராநின்றது; அது காரணமாக நீ வருந்தாதே கொள். எ - று.

     (வி - ம்.) பொற்காசு - பொன்னாபரணம். உழைமான்: இருபெயரொட்டு.

     மழை பெய்திருப்பதோடு அந்நெறிகளும் சிறிய தூரங்களுடையது அன்றிக் கடத்தற்கரிய பெரியவல்லவென்பாள், குறும்பல் அத்தமென்றாள். நீர்மிக்கு இருப்பதோடு நிழலும் நன்குடையதென்பாள், சோலைவைப்பிற் சுரனென்றாள்.

     இறைச்சி :- மான்சென்று தீண்டலும் குமிழ் பழத்தை உதிர்க்கும் என்றது. தலைவர்சென்று பொருளீட்டத் தொடங்கலும் உடனே பொருள் கைவருமாதலின் விரைந்து வருவரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) வேறுபட்டுச் சுரன் இறந்தோர் என இயைத்துக்கோடல் நன்று. இஃது எம்பெருமான் கொடிய பாலையின்கண் செல்லுங்கால் என்படுவரோ என்று கவன்ற தலைவிக்குத் தோழி பாலை நிலத்தே மழைபெய்து நெறி நல்லவாயின என்பது அவர் கூற்றாலேயே தெளிந்தேம். ஆகலின் கவலற்க! என்று ஆற்றுவித்தபடியாம். இனி எம்மொடு வருதியோ? என்று கூறின்றும் உடையரோ? என்றதற்கு நந்தலைவர் சுரன் செல்லுங்கால் நின்னை நோக்கி நீ எம்மொடு வருதியோ? என ஒரு சொல்லேனுங் கூறினரோ கூறினாரிலரே என்று இயற்பழித்துத் தலைவியின் நினைவை வேறுவழியிற் றிருப்பினாள் எனப் பொருள் கூறதல் நன்று. இயற்பழிக்கு மாற்றால் தலைவன் கூற்றைக் கொண்டுகூறிப் பாலை நிலம் மழையாற் றண்ணி தாயிற்று என்றுணர்த்தும் திறன் நினைக.

(274)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் பிரிந்த தலைமகன் மீண்டு ஒரு சிறைப்புறமாக வருதலையறிந்த தோழி தலைமகளை நோக்கி "அவன் இப்பொழுதே வந்துவிடுவன் ஆதலின் நீ வருந்தாதே யென்று" வலியுறுத்திக்