பக்கம் எண் :


488


    உள்ளுறை :- கானவன் எய்துபெற்ற முளவுமானேற்றையொடு உவகையனாய் நாய்கள் மனையகத்து எதிரேபோந்து குரைத்து மகிழா நிற்பக் குடிவயிற் பெயருமென்றது, தலைமகன் தான் களவொழுக்கத்துப் பெற்ற தலைவியை இரவில் உடன்கொண்டுசென்று தன்னூர்வயிற் புகுந்து தன்மனையின்கணுள்ள தமர் மகிழாநிற்ப மணம்புணர்வானாக என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) அரவு இரைதேரும் ஆர் இருள் நடுநாள் என்றது ஆறின்னாமை கூறி இரவுக்குறி மறுத்ததாம்; அம்பலின் அகலான் பகலும் வரூஉம் என்றது அலரறிவுறீஇப் பகற்குறியும் மறுத்ததாம். எனவே இனி வரைந்துகோடலே தகுதி என்று வரைவு கடாவியதாயிற்று.

(285)
  
    திணை : பாலை.

    துறை : இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

    (து - ம்.) என்பது, வணிகர் தலைமகன் பொருள்வயிற் பிரிதலால் வருந்திய தலைவியைத் தோழி நெருங்கி அவர் பிரிதலால் இறந்துபடுவேனென்று வருந்தாதேகொள்; நட்பாளர்க்கு ஆக்கமும் நின் தோளுக்கு அணியும் கொண்டுவரவேண்டியன்றோ அவர் சென்றதென வலியுறுத்தி ஆற்றுமாறு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனால் அமைத்துக்கொள்க.

    
ஊசல் ஒண்குழை உடைவியத்து அன்ன 
    
அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி 
    
கல்லென வரிக்கும் புல்லென் குன்றம் 
    
சென்றோர் மன்ற செலீஇயரென் உயிரெனப் 
5
புனையிழை நெகிழ விம்மி நொந்துநொந்து 
    
இனைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின் 
    
நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய 
    
நின்தோள் அணிபெற வரற்கும் 
    
அன்றோ தோழியவர் சென்ற திறமே. 

    (சொ - ள்.) ஆய் இழை தோழி உடைவியத்து ஒண்குழை ஊசல் அன்ன அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி கல் என வரிக்கும் - ஆராய்ந்தணிந்த இழையையுடையாய்! தோழீ, உடைமரங்கள் மிக்க நெறியின்கண்ணே மகளிரின் ஒள்ளிய குண்டலத்திற்கொளுவிய ஊசல் போன்ற மலை நெறியிலுள்ள குமிழ மரத்தின் அழகிய இதழையுடைய மலர் கல்லென்னும் ஒலியோடு கோலஞ்செய்தாற்போல