பக்கம் எண் :


490


    
விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப் 
    
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த 
    
நல்லெயில் உடையோர் உடையம் என்னும் 
    
பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப் 
5
பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன் 
    
நாம முதலை நடுங்குபகை அஞ்சான் 
    
காமம் பெருமையன் வந்த ஞான்றை 
    
அருகா தாகிய வன்கண் நெஞ்சம் 
    
நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறுந் 
10
தேர்மணித் தெள்ளிசை கொல்லென 
    
ஊர்மடி கங்குலுந் துயின்மறந் ததுவே. 

    (சொ - ள்.) கொடுங் கழிப் பாசடை நெய்தல் பனி நீர்ச் சேர்ப்பன் - வளைந்த கழியின் கண்ணே பசிய இலைகளையுடைய நெய்தன்மிக்க குளிர்ந்த நீரையுடைய கொண்கன்; நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை - அச்சஞ் செய்கின்ற முதலையின் நடுக்க முறுத்தும் பகைமைக்கும் அஞ்சானாகிக் காம மிகுதியால் இங்கு வந்தபொழுது; விசும்பு உறழ் புரிசை வெம்பமுற்றிப் பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்த - விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகை செய்து பசிய கண்ணையுடைய யானைப் படையொடு பகையரசன் அதன் புறத்தே தங்கப் பெற்றதனால்; நல் எயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போல - அப் பகையரசனை உள்ளே புகுதவிடாதபடி நல்ல மதில்காவலுடையாரை யாம் பெற்றுடையோமென்று கருதியிருக்கின்ற பெருந்தன்மையுடைய உள்ளடைப்பட்டிருந்த வீரனைப்போல; அருகாது ஆகிய வன்கண் நெஞ்சம் - கெடாத வன்கண்மையுடைய என்னெஞ்சமானது இப்பொழுது; நள் என் கங்குல்புள் ஒலி கேள் தொறும் - செறிந்த இருளையுடைய நடுயாமத்திலே பறவையொலிப்பதைக் கேட்குந்தோறும்; தேர் மணித் தெள் இசை கொல் என - நங்காதலன் ஊர்ந்து வருகின்ற தேரிலே கட்டிய மணியின் தெளிந்த ஓசையோ? என்று; ஊர் மடிகங்குலும் துயில் மறந்தது - ஊராரெல்லாரும் உறங்குகின்ற இராப்பொழுதினும் துயில் கொள்வதனை மறந்துளதாயிரா நின்றது; எ - று.

    (வி - ம்.) தான் காவலுட்பட்டிருந்தமையை முற்றுகையுட்பட்ட வீரனோடு உவமித்தாள். அவ்வீரன் எயில்காவலரை உடையேமென்றிருத்தல்போல யானுந் தலையளி செய்யுந் தலைவனையுடையேனாயிருந்தேன் அது கழிந்த தென்பாள், இப்பொழுது காவன்மிகுதியாலும்