(து - ம்.) என்பது, சிறைப்புறம்வந்த தலைமகன் கேட்டு விரைய வரையுமாறு தோழி தலைவியை நெருங்கி நாடன்பிரிவினாலே பசலை தோன்றியதறிந்த அன்னை கட்டுவைத்துக் கேட்டால் அந்தக் கட்டுக் குறியானது முன்பு யாம் கிளியோப்பிப் புனங்காவல் செய்யச் சென்றிருந்தும் அதனையறியாது நெடிய முருகவேள் அணங்கியதென்று சொல்லுமோவென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| அருவி யார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு |
| ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப் |
| பீலி மஞ்ஞை பெடையோ டாடுங் |
| குன்ற நாடன் பிரிவிற் சென்று |
5 | நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை |
| செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக் |
| கட்டிற் கேட்கும் ஆயின் வெற்பில் |
| ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல் |
| குறுகிளி கடிகஞ் சென்றும்இந் |
10 | நெடுவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே. |
(சொ - ள்.) ஓங்கு சினைப் பீலி மஞ்சை இள வெயில் உணீஇய அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடுங்கோட்டு ஞாங்கர் - உயர்ந்த மரக்கிளையிலுள்ள பீலியையுடைய மயில் காலையில் விரிந்த இளவெயில் காயவேண்டி அருவியொலிக்கின்ற அச்சமுடைய நெடிய கொடுமுடியின் பக்கத்திலே; பெடையோடு ஆடும் குன்ற நாடன் பிரிவின் சென்று - தன் பெடையோடு