பக்கம் எண் :


492


விளையாடாநிற்கும் மலைநாடன் நம்மைப் பிரிதலினாலே சென்று; நல்நுதல் பரந்த பசலை கண்டு அன்னை செம்முது பெண்டிரொடு - நல்ல நினது நுதலிலே பரந்த பசலையை நோக்கி நம் அன்னை சேரியிலுள்ள செம்மையாகிய முதுமையுடைய கட்டுவிச்சி முதலாயினோருடனே இல்லகம் புகுந்து; முன் நெல் நிறீஇக் கட்டிற்கேட்கும் ஆயின் - முன்னர் முறத்தில் நெல்லைப் பரப்பிக் கட்டுவைத்து நம்மை எதிரில் நிறுத்திக் குறிகேட்குமாயின்; வெற்பில் ஏனல் செந்தினைப் பால் ஆர் கொழுங்குரல் குறுகிளி கடிகம் சென்றும் அது - அக்கட்டுக் குறியானது இப்பொழுது மலையிடத்தில் உள்ள ஏனலாகிய சிவந்த தினையின் பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போகுங் கிளிகளை வெருட்டுவேமாகிச் சென்றிருந்தும் அதனையறியாது; இந்நெடுவேள் அணங்கிற்று என்னுங்கொல் - இவள் இந்நெடிய முருகவே ளிருக்குமிடத்து அருகு சென்றதனால் முருகவேள் அணங்கியதென்று கூறாநிற்குமோ? எ - று.

    (வி - ம்.) ஏனலாகிய தினை : இருபெயரொட்டு.

    கட்டு - சேரியின் முதுபெண்டாகிக் குறிசொல்லுமாதரை மனையகத்துக் கொணர்ந்துவைத்து முறத்திலே பிடிநெல்லையிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து அந்நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும் முருகணங்கெனவும் நான்காயின் பிறிதொரு நோயெனவுங் கூறப்படுவது. முருகணங்கென்று கூறின் உடனே வேலனை (முருகனுக்குப் பூசை நடத்தும் பூசாரியை) அழைத்து வெறிக்களந்திருத்தி முருகவேளுக்குச் சிறப்பெடுத்து ஆண்டுக் கழங்குக் குறிபார்ப்பது. அதனை நேர்ந்துழி இந்நூலுட் கூறப்படுவதறிக.

    உள்ளுறை :- இளவெயிலுண்ணவேண்டி மயில் பெடையோடு கோட்டின்பக்கஞ் சென்று ஆங்கு ஆடுமென்றது, காமவின்பந் துய்த்து இல்லறம் நிகழ்த்தவேண்டித் தலைமகன் தலைமகளைக்கொண்டு தலைக்கழிந்து மணந்து வைகுவானாக என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) செம்முது பெண்டிர் என்றது செவிலியின் தோழியராகிய அகவைமுதிர்ந்த பெண்டிரை என்று கோடலே சிறப்பு. குறுகிளி : வினைத்தொகை. 'பெடையொடு ஆலும்" என்றும் பாடம்.

(288)
  
    திணை : முல்லை.

    துறை : இது, பிரிவிடைப் பருவங்கண்டு சொல்லியது.

    (து - ம்.) என்பது, பிரிந்த தலைமகன் குறித்தபருவத்து வாராமையால் வருந்திய தலைவி 'அவர் சொல்லிய சொற்பிழையார்; அதன்முன்