(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுப்ப வந்த பாணனைத் தோழி நோக்கித் 'தலைவன்பால் இறைமகள் வேட்கையுடையாளென்னுங் குறிப்பு அறிந்தனளாதலின், அதற்கேற்கும்படி கூறுவாளாகிப்' பாணனே, இவள் தான் நலமிழந்து வருந்துவதனை நீ கண்ணாலே கண்டவாறு துறைவன் உள்ளங்கொள்ள மொழிந்தாயல்லையே. இது தகுதியோவென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பாணர் . . . . பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்று அள்ளல் |
| நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு |
| குப்பை வெண்மணல் ஏறி அரைசர் |
| ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் |
5 | தண்பெரும் பௌவநீர்த் துறைவற்கு நீயுங் |
| கண்டாங்கு உரையாய் குணமோ பாண |
| மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து |
| எல்லித் தரீஇய இன நிரைப் |
| பல்லான் கிழவரின் அழிந்தவிவள் நலனே. |
(சொ - ள்.) பாண மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து - பாணனே! மிக்க பெரிய முள்ளூர் மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி் பரியேறிச் சென்று; எல்லித் தரீஇய இனநிரைப் பல்லான் கிழவரின் - இராப் பொழுதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட கூட்டமாகிய பலவாய பசுவினிரைக்குரியவர் அவனோடெதிர்நின்று போர்முனையில் அழிந்தாற்போல; அழிந்த இவள் நலம் - அழிந்து போகிய இவளது நலத்தை; நீ கண்டாங்கு - நீ கண் கூடாகக் கண்டபடி; நீர் பெயர்ந்து மாறிய செறி அள்ளல் சேற்று - நீர் தன்னிலையிலிருந்து ஓடி வற்றிய அள்ளற் சேற்றின்கணுள்ள; நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு - நிணமிக்க தலையையுடைய கொழுத்த மீனை அருந்த வேண்டி நாரையினம்; குப்பை வெள்மணல் ஏறி - குவிந்த வெளிய மணல்மேட்டில் ஏறியிருந்து; அரைசர் ஒள் படைத்தொகுதியின் இலங்கித் தோன்றும் - அரசரது ஒள்ளிய காலாட்படையின் கூட்டம்போல விளங்கித் தோன்றாநிற்கும்; தண்பெரும் பௌவம் நீர்த் துறைவற்கு - தண்ணிய பெரிய கடனீர்த்துறையை