(து - ம்.) என்பது, தலைவன்மீதுண்டாகிய காதலானது கைகடந்து பெருக அது தாங்க இயலாத தலைவி தோழியை நெருங்கி நாம் துயரமடைதல் போல நம் கொண்கனும் துன்பமெய்தி, 'நள்ளிரவினும் நம் காதலி துயிலாளாய் வருந்துவளோ' என்று தன் நெஞ்சிலே கருதுவதுண்டாகுமோ, ஆகும் எனில் ஒன்று கூறுவாயாகவென்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதியாற் கொள்க.
துறை : (2) சிறைப்புறத்தானென்பது மலிந்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைவந்து உறைவதனை அறிந்த தோழி சொல்லியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதற்கு, "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.