(து - ம்.) என்பது, பொருள்வயிற்பிரியுமாறு கருதிய தலைமகன் தலைமகள்பால் நெருங்குதலும் இவனது பிரிவின் குறிப்பறிந்த அவள் வருந்தி இவன்மீது சாய்ந்து கலங்கி வருந்துவதறிந்து இவ்வண்ணம் என்மேலழிந்து சாய்தலால் என்னுள்ளம் பிரிதலையொழித்து இவள்பால் முயங்கியுறையா நின்றது, இனிப் பொருளால் ஆவதென்னென்று செலவழுங்கிக் கூறாநிற்பது.