பக்கம் எண் :


524


    (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
செலவிரை வுற்ற அரவம் போற்றி 
    
மலரேர் உண்கண் பனிவர ஆயிழை 
    
யாம்தற் கரையவும் நாணினள் வருவோள் 
    
வேண்டா மையின் மென்மெல வந்து 
5
வினவலுந் தகைத்தலுஞ் செல்லா ளாகி 
    
வெறிகமழ் துறுமுடி தயங்க நல்வினைப் 
    
பொறியழி பாவையிற் கலங்கி நெடிதுநினைந்து 
    
ஆகம் அடைதந் தோளே அதுகண்டு 
    
ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் 
10
பெருமழைப் பெயற்கேற் றாங்கெம் 
    
பொருண்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே. 

    (சொ - ள்.) ஆய்இழை - ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; செல விரைவு உற்ற அரவம் போற்றி - நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; மலர் ஏர் உண்கண் பனிவர - குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் - அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; வேண்டாமையின் மெல் மெல வந்து வினவலும் தகைத்தலுஞ் செல்லாளாகி - யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; வெறி கமழ் துறுமுடி தயங்க நல்வினைப் பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து ஆகம் அடைதந்தோள் - மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அதுகண்டு ஈர்மண் செய்கை நீர்படு பசுங் கலம் பெருமழைப் பெயற்கு ஏற்று ஆங்கு - அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள் மலி எம் நெஞ்சம் புணர்ந்து உவந்தன்று - பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன்