பக்கம் எண் :


536


    
ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப் 
    
1 பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு 
    
மூத்துவினை போகிய முரிவாய் அம்பி 
    
நல்லெருது நடை 2 வளம் வைத்தென உழவர் 
5
புல்லுடைக் காவின் தொழில்விட் டாங்கு 
    
நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ 
    
ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் 
    
முழவு முதற் பிணிக்குந் துறைவ நன்றும் 
    
விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதின் 
10
தவறுநன்கு அறியா யாயின் எம்போல் 
    
ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் 
    
மலர்தீய்ந்து அனையர் நின்நயந் தோரே. 

     (சொ - ள்.) ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென - நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; பார்த் துறைப்புணரி அலைத்தலின் புடைகொண்டு மூத்து வினை போகிய முரி வாய் அம்பி - கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல் எருது நடை வளம் வைத்தென உழவர் புல் உடைக் காவின் தொழில் விட்டு ஆங்கு - நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறு விரை நல் புகை கொடாஅர் - நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறு வீ ஞாழலொடு கெழீஇய புன்னைக் கொழுநிழல் முழவு முதல் பிணிக்கும் துறைவ - சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; நன்றும் விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறு நன்கு அறியாயாயின் - பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின் நயந்தோர் எம்போல் ஞெகிழ்தோள் கலுழ்ந்த கண்ணர் மலர் தீய்ந்து அனையர் - நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்; எ - று.

  
 (பாடம்) 1. 
பாரத்துப்.
 2. 
வளம் வாய்த்தென.