(து - ம்,) என்பது, வினைவயிற்சென்று மீளுந் தலைமகன் தேர்ப்பாகனை நோக்கி நம் காதலி மாலைப்பொழுது நாமில்லாத வறுமனையை நோக்கி வருந்தாநிற்பளோ? விரைவில் நினது தேரைச் செலுத்துவாயாக: காட்டின்கண்ணே நெருங்குதலும் எம்மூர் மரங்கள் தோன்றா நிற்பன காண் என உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை |
| பாடின் றெண்மணித் தோடுதலைப் பெயரக் |
| கான முல்லைக் கயவாய் அலரி |
| பார்ப்பன மகளிர் சாரற்புறத்து அணியக் |
5 | கல்சுடர் சேருங் கதிர்மாய் மாலைப் |
| புல்லென் வறுமனை நோக்கி மெல்ல |
| வருந்துங் கொல்லோ திருந்திழை அரிவை |
| வல்லைக் கடவுமதி தேரே சென்றிக |
| குருந்தவிழ் குறும்பொறை பயிற்றப் |
10 | பெருங்கலி மூதூர் மரந்தோன் றும்மே. |
(சொ - ள்.) திருந்து இழை அரிவை - திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; செந் நிலப் புறவின் புன்மயிர்ப்