பக்கம் எண் :


547


     (து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்க மேற்கொண்டு சிறைப்புறமாக வந்திருப்பதையறிந்த தோழி, - அவன் கேட்டு உள்ளுறையால் விரைவிலே பொருளீட்டிவந்து வரைந்துகொள்ளுமாறு தலைவியை நெருங்கித் தோழீ! நாடனது மார்பைப் பெறாமையாலாகிய வேறுபாட்டையறிந்த அன்னை முருகணங்கென்று வெறியெடுத்தலும் அங்கெய்திய வேலன் இடுகின்ற பலியால் இவ்வேறுபாடு நீங்குமாயின் இதனினுங் கொடியதொன்றில்லை கண்டாய்: அங்ஙனம் நிகழ்வது உண்மைதானோ ஒன்றுகூறாயென்று கவன்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) தலைமகன் பாங்கிக் குரைத்ததூஉமாம்.

     (து - ம்,) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்குமொக்கும்.)

(இ - ம்.) இதற்கு, "வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
ஆங்ஙனந் தணிகுவது ஆயின் யாங்கும் 
    
இதனிற் கொடியது பிறிதொன் றில்லை 
    
வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து 
    
எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை 
5
ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர் 
    
ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக் 
    
கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் 
    
தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது 
    
நன்னுதற் பசந்த படர்மலி அருநோய் 
10
அணங்கென உணரக் கூறி வேலன் 
    
இன்னியங் கறங்கப் பாடிப் 
    
பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே. 

     (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வேய் உயர்ந்து எறிந்து செறித்துஅன்ன பிணங்கு அரில் விடர் முகை - மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊன் தின் பிணவின் உட்கு பசி களைஇயர் - ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசிையைப் போக்க வேண்டி; ஆள் இயங்கு அரும்புழை ஒற்றி வாள் வரிக் கடுங் கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் - மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண் கமழ் வியன்