(து - ம்,) என்பது, இரவிலே கொடிய நெறியின்கண்ணே களவொழுக்கத்து வருந் தலைமகனை மறுத்து வரைவுடன்படுத்தக் கருதிய தோழி நெருங்கி நாடனே! இரவில் நெறியினது ஏதம் அஞ்சாது வாராநின்றனை; அதனை யான் நினையாமுன் அஞ்சுகிற்பேனாதலால் அவ் வரைநெறியில் வாராது ஒழிவாயாக என அந்நெறியினது ஏதங்கூறி உள்ளுறையால் இவளை வதுவையயர்ந்து மனையறம்படுத்து வாழ்கவென நுவன்று வரைவுகடவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க; இனி, "களனும் பொழுதும் . . . .