பக்கம் எண் :


574


ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; எவ்வம் இறப்ப நலியும் - காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; மால்கொள பைதல் குருகு - இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; வியல் இரும் பரப்பின் எழுந்து இரை அருந்துபு - அகன்ற கரிய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி - அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய - வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; உயிர் செலக் கடைஇ - யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; புணர் துணைப் பயிர்தல் ஆனா - தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி - இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, 'நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும்' என்று கூறாநின்றனை; நிலைப்ப யாங்ஙனம் விடும் - இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ? எ - று.

     (வி - ம்.) குருகு அருந்துபு ஏறிக் கடைஇப் பயிர்தலை அமையாவென்க.

     அஃறிணையாகிய குருகும் இரையருந்திக் குடம்பையிலே சென்று இருந்து தான்பெடையை யணையுமளவும் அதனை விளியா நிற்கும், எல்லாம் அறிந்த நம் காதலர் அங்ஙனஞ் செய்வாரல்லர்; யான் எவ்வாறுய்வேன் எனவுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) பகற்பொழுதில் ஒருவாறு ஆற்றியிருப்பேன்மன்; அப் பகற்பொழுதும் கழிந்து பொல்லாத மாலைப் பொழுதும் புக்கதே என்று இரங்குவாள் 'ஞாயிறு மலை மறைந்தன்றே' என்றாள்.

(338)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் கரந்து ஒருபால் வந்து தங்கியதை யறிந்த தோழி அவன் உணர்ந்து விரைவிலே வரைந்து கொள்ளுமாறு தலைவியை நெருங்கி 'அன்னை இவள்