இவ் வேறுபாடெய்தியது எதனாலென்றலும் சுனையாடியதனால் உண்டாகிய தென்றேன்; அது மிகை என்று கொண்டு நாளை அதனிலாடின் இன்னும் எவ்வாறாகுமோ என்றனளாதலின், நம் காதலர் பிரிதலால் நாம் வருந்துகின்றோ மென்பதை அவள் அறிந்தனள் போலு'மென்று சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| தோலாக் காதலர் துறந்துநம் அருளார் |
| 1 அலர்வது அன்றுகொல் இதுவென்று நன்றும் |
| புலரா நெஞ்சமொடு புதுவ கூறி |
| இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
5 | அறிந்தனள் போலும் அன்னை சிறந்த |
| சீர்கெழு வியன்நகர் வருவனள் முயங்கி |
| நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் |
| ஒண்ணுதல் பெதும்பை நல்நலம் பெறீஇ |
| மின்நேர் ஓதி இவளொடும் நாளைப் |
10 | பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித் |
| தெண்ணீர் மணிச்சுனை ஆடின் |
| என்னோ மகளிர்தம் பண்பென் றோளே. |
(சொ - ள்.) அன்னை சிறந்த சீர் கெழு வியன் நகர் வருவனள் முயங்கி - தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து ("நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?" என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இ்வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது;) நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் ஒள் நுதல் - நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பை நல் நலம் பெறீஇ ஓதி மின் நேர் இவளொடும் - பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் தெள் நீர் மணிச் சுனை ஆடின் - நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தெளிந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர்தம் பண்பு என்னோ என்றோள் - மகளிர் மேனியின்
(பாடம்) 1. | ஆவது அன்று கொல். |