(து - ம்.) என்பது, பகைமேற் சென்று முனையிடத்துப் பாசறைக் கண் உள்ளானாகிய தலைமகன் அயலிலொரு குன்றின்மேல் ஓராடவனும் அவன் காதலியும் விளையாடுவதனை நோக்கி 'இம் மடந்தை தன் காதலனொடு சிறிய நொடிபயிற்றி மகிழா நிற்கும்; இங்ஙனம் எம் காதலி ஆற்றி மகிழ இடனின்றி யாம் பாசறையின்கண் இராநின்றேமென்று புலம்பா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பாசறைப் புலம்பலும்" (தொல். அகத். 41) என்னும் விதிகொள்க.
| வங்கவரிப் பாறைச் சிறுபாடு முணையின் |
| செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும் |
| விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து |
| உலையா உலவை ஒச்சிச்சில கிளையாக் |
5 | குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் |
| துணைநன் குடையள் மடந்தை யாமே |
| வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென |
| நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு |
| வேறுபுல வாடை அலைப்பத் |
10 | துணையிலேம் தமியேம் பாசறை யேமே. |