பக்கம் எண் :


586


     உள்ளுறை :-கண்டற்காய் மோதி விழுதலால் மலரும் பருவத்தல்லாத ஆம்பல் வருந்தி விரியுமென்றது ஏதிலாட்டியர் அலர் தூற்றுதலால், இதுகாறும் நாணமுதலாய பண்பு மிகுதியால் வாய்திறவாதிருந்த இவள் இப்பொழுது புலம்பாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - தலைமகனைக் கடிந்துகூறி வரைவுகடாதல்

.
(345)
  
     திணை : பாலை.

     துறை : இது, பொருள்வயிற்பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரிந்து இடைச்சுரத்துற்ற தலைமகன் தலைமகளை நினைந்து, காதல் மிகுதலாலே, அது தணியானாய் நெஞ்சமே! நம் காதலியின் தோள்களை இப்பொழுது இங்கு நினைந்து மகிழ்கின்றனை போலும்; அவை இங்கு அடைதலரிய அல்லவோ வென்று இகழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
குணகடல் முகந்து குடக்கேர்பு இருளித் 
    
தண்கார் தலைஇய நிலந்தணி காலை 
    
அரசுபகை நுவலும் அருமுனை இயவின் 
    
அழிந்த வேலி அம்குடிச் சீறூர் 
5
ஆளில் மன்றத்து அல்குவளி ஆட்டத் 
    
தாள்வலி யாகிய வன்கண் இருக்கை 
    
இன்றுநக் கனைமன் போலா என்றும் 
    
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் 
    
பெருந்தண் கொல்லிச் சிறுபசுங் குளவிக் 
10
கடிபதங் கமழுங் கூந்தல் 
    
மடமா அரிவை தடமென் தோளே. 

     (சொ - ள்.) குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித்தண் கார் தலைஇய நிலம் தணி காலை - நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசு பகை நுவலும் அரு முனை இயவின் - அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலி அம் குடி அழிந்த சீறூர் - வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; ஆள் இல் மன்றத்து