(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்து ஆற்றாமை வாயிலாகப் புகுந்து பள்ளியிடத்தானாகிய தலைமகனைத் தலைமகள் நெருங்கி ஊடல் தீர்கின்றாள், ஊரனே! எனது நலன்முழுவதுந் தொலையினும், என்னை நீ நெருங்க விடேன்; நெருங்க விடுவேனாயின் என்வரைத்தன்றி என்கை நின்னை அணைத்து முயங்காநிற்கும்; சார்ந்த முதலாயின உடையையாதலின் நின்னை நீக்குவது கலங்கழிப்பது போலாம்; அதனால் இங்கு வாராதேகொள்; நின்னொடு அப் பரத்தை நீடுவாழ்வாளாக என வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு,
| "புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு |
| அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி |
| இயன்ற நெஞ்சந் தலைபெயத் தருக்கி |
| யெதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்" (தொல். கற். 6) |
என்னும் விதிகொள்க.
| வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் |
| பழனப் பல்புள் இரியக் கழனி |
| வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிருந் |
| தேர்வண் விராஅன் இருப்பை அன்னஎன் |
5 | தொல்கவின் தொலையினுந் தொலைக சார |
| விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக |
் | கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை |