(து - ம்.) என்பது, களவுக்காலத்துப் பிரிவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி இவள் முருகனால் அணங்கப்பட்டாளென்று அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, அறத்தொடு நிற்பாளாய் வெறிவிலக்குமாறு நாடனது மார்பினால் வந்த இந்நோய் நின்னாலணங்கப்பட்டதன்றென்பதை நீ யறிந்து வைத்தும் நின்னணங் கென்று விளிப்பதற்காகப் பலியேற்க வருவையெனில் நீ யறிவில்லாதவனென்று முருகனை நோக்கி இழந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு "களம் பெறக் காட்டினும்" (தொல்-கள, 23) என்னும் விதி கொள்க.
| கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த |
| பறியாக் குவளை மலரொடு காந்தள் |
| குருதி யொண்பூ உருகெழக் கட்டிப் |
| பெருவரை யடுக்கப் பொற்பச் சூர்மகள் |
5 | அருவி யின்னியத் தாடு நாடன் |
| மார்புதர வந்த படர்மலி யருநோய் |
| நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து |
| கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி |