பக்கம் எண் :


61


    
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் 
10
கடவு ளாயினும் ஆக 
    
மடவை மன்ற வாழிய முருகே. 

    (சொ - ள்.) முருகே வாழிய - முருகவேளே ! நீ நெடுங் காலம் இம் மடமையோடு வாழ்வாயாக !; கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு - கடவுட்டன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு; குருதிக் காந்தள் ஒண் பூ உருகெழக் கட்டி - குருதிபோன்ற காந்தளின் ஒள்ளிய மலர்களை வடிவு விளங்கக் கட்டிச் சூடி; பெருவரை அடுக்கம் பொற்ப அருவி இன் இயத்துச் சூர்மகள் ஆடும் நாடன் - பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவுபெற அருவியின் ஒலியை இனிய வாச்சிய முட்டுக்களாகக்கொண்டு சூரரமகள் ஆடாநிற்கும் நாட்டையுடைய தலைவனது; மார்புதர வந்த படர்மலி அருநோய் - மார்பைப் புணர்ந்ததன் காரணமாக அம் மார்பு தருதலாலே வந்த கருதுதலிற் குறைபாடிலாத நீங்குதற்கரிய இக்காம நோயானது; நின் அணங்கு அன்மை அறிந்தும் - நின்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட தன்றென்பதை நன்றாக நீ அறிந்து வைத்தும்; அண்ணாந்து கார் நறு கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட - தலைநிமிர்ந்து கார் காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுகையாலே; வெறி மனை வந்தோய் கடவுள் ஆயினும் ஆக - வெறிக்களத்துப் பலிபெற வந்தோய் நீ கடவுட் பகுதியாருள் வைத்தெண்ணுதற் குரியையாயினுமாகுக; மன்ற மடவை - திண்ணமாக நீ அறியாமையுடையை காண் ! எ - று.

    (வி - ம்.)பறியாக்குவளை - கடவுட்சுனை மலராதலிற் பூப்பலிக் கன்றிப் பறியாத குவளை. கடம்பு - செங்கடம்பு. மன்ற : தேற்றப்பொருள்பட்ட இடைச்சொல். படர்தல் - கருதுதல். பிள்ளையார் வேலையேந்தியாடுதலிற் படிமத்தான் வேலனெனப்பட்டான். இவன் இக் காலத்துப் பூசாரி யெனப்படுவான். வாழிய : இகழ்ச்சிக்குறிப்பு. அண்ணாந்து - நினக்குத் தலையெடுப்பும் வேண்டுமா வென்றிகழ்ந்தது.

    இறைச்சி :- சூரரமகள் மாலைசூடி அருவியை இனிய வாச்சியமாகக் கொண்டு ஆடுமென்றதனானே தலைமகள் தலைவனை மணமாலையணிந்து மணந்து என்னை எஞ்ஞான்றும் தனக்கு உசாத்துணையாக நீங்காது கொண்டு இல்லற நிகழ்த்தக் கருதியிருக்கு மென்றவாறு. சூரரமகளெனத் தெய்வத்தை இடையிட்டுரைத்தமையின் உள்ளுறையன்மையுணர்க. மெய்ப்பாடு -பெருமிதத்தைச் சார்ந்த நகை. பயன் - குறிப்பினால் வெறிவிலக்குவித்தல்.

    (பெரு - ரை.) இச் செய்யுளோடு,