(து - ம்.) என்பது, வரைந்தபின் மணமனைபுக்க தோழியைப் பிரிவுக்காலத்து நன்காற்றுவித்தாயென்ற தலைமகற்குத் தலைவி பொருட்டு யாய்க்கஞ்சி யொழுகினேனை நீ விரைய வந்து காத்ததன்றியான் ஆற்றுவித்தது முளதோவெனக் கூறுவாள் சிறிது கைநெகிழிற்பண்டும் இத்தன்மையளே யெனப் பிரிவால் தலைவி வருந்துந் தன்மையுஞ் சேரக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குக் "கற்புங் காமமும். . . . .கிழவோற்குரைத்தல் அகம்புகன் மரபின் வாயில்கட் குரிய" (தொல்-கற்- 11) என்னும் விதி கொள்க,
| பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப் |
| புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி |
| கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் |
| பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து |
5 | கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
| இரைதேர் நாரை யெய்தி விடுக்குந் |
| துறைகெழு மாந்தை யன்ன இவள்நலம் |
| பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய |
| உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய |
10 | ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் |
| கட்கழி செருக்கத் தன்ன |
| காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே. |
(சொ - ள்.) பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப் புன் கால் நாவல் பொதிப்புற இருங்கனி - பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; கிளை செத்து