பக்கம் எண் :


607


தூஉய்ப் பரவினம் வருகஞ் சென்மோ - கணங்களையுடைய அக் கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டு நீர்வளாவிச் சாந்தி செய்து பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினமாகிப் பின்பு வருவோம், அதற்காக ஆண்டுச் செல்வோமோ? ஒன்று ஆய்ந்து கூறுவாய் காண்! எ-று.

     (வி - ம்.) பெருந்தோள் நெகிழ்தல் முதலியன முன்பொரு காலத்து நிகழ்ந்தவை. தெளித்தல் - சூளுறுதல். ஆகம் - கொங்கை. கடவுட்குப் பலிக் கொடை நேர்ந்தால் அவர் ஊறின்றி வருவரென ஆற்றுவித்தது, "தாயத்தி னடையா" (தொல். பொ. 22) என்றதன்படி தலைவி நலனைத் தோழி எனது நலனென்றாள்.

     உள்ளுறை :-இறாவின் முடங்கலைச் சிறு வெண்காக்கை நாட்காலையின் இரையாகப் பெறுமென்றது, பெரிய பொருளை நம் தலைவர் ஆண்டுச் சென்றவுடன் பெற்று மீள்வரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) இது, 'தெய்வமஞ்சல்' என்னும் மெய்ப்பாடு.

(358)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகள் குறிப்பின் ஓடியது.

     (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைவன் கொடுத்த கையுறையை ஏற்றுத் தலைவியிடஞ் சென்று அவள் கருத்து நாண முதலாய மேற்கொண்டதனால் வேறுபட்டிருப்பது அறிந்த தோழி, 'இன்று தலைமகன் தழை தந்தனன;் அவற்றை யுடுத்தால் அன்னை முனியுமென் றஞ்சுதும்; வேண்டா வென்று தழையை மறுத்தால் அவனது ஆற்றாமை கண்டஞ்சுதும்; இடையே அத் தழை வாடவேண்டுவபோலு' மென்று அவள் குறிப்பின்வழி ஒழுகுவாள் போன்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "குறைந்து அவட் படரினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா 
    
அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக் 
    
கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் 
    
உடுக்குந் தழைதந் தனனே அவையாம் 
5
உடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பின் 
    
கேளுடைக் கேடஞ் சுதுமே ஆயிடை 
    
வாடல கொல்லோ தாமே 1அவன்மலைப் 
 (பாடம்) 1. 
அவர்மலைப்.