பக்கம் எண் :


608


    
போருடை வருடையும் பாயாச் 
10
சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே. 

     (சொ - ள்.) சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா - மலையின் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசு; அலங்கு குலைக் காந்தள் தீண்டித் தாது உக - அசைகின்ற குலையையுடைய காந்தளைத் தீண்டி அக் காந்தண் மலரிலுள்ள தாதுக்கள் தன்மேல் உதிரப் பெற்றதனாலே நிறம் வேறுபாடுடைமை நோக்கி; கன்று தாய் மருளும் குன்ற நாடன் - அதன் கன்று தன் தாயென் றறியாமல் மயங்காநிற்கும் மலைநாடன், உடுக்கும் தழை தந்தனன் அவை - உடுத்திக் கொள்ளுந் தழையைக் கையுறையாகக் கொடுத்தனன், அவற்றை எம் நாட்டினர் உடாராதலின், யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும் - யாங்கள் மட்டும் உடுத்திக்கொள்ளின் அன்னை கேட்டற்கு யாது விடை சொல்ல வல்லேமென்று அஞ்சாநிற்பேம்; கொடுப்பின்கேள் உடைக் கேடு அஞ்சுதும் - அத் தழையுடையை மீட்டும் தலைவன்பாற் கொடுத்துவிடின் அதனால் அவன்படும் ஆற்றாமைக்கு அஞ்சாநிற்பேம்; ஆயிடை அவன் மலைப் போர் உடை வருடையும் பாயா - ஆகிய அவற்றிடையே அவனது மலையிலுள்ள போரைச் செய்தலையுடைய வரையாடும் பாய்ந்து செல்லாத; சூர் உடை அடுக்கத்த கொயற்கு அருந் தழை தாம் - தெய்வம் இருக்கின்ற மலைப் பக்கத்தின்கண்ணே உள்ள கொய்தற்கரிய தழைதாம்; வாடல கொல்லோ - வாடுதலுடைய ஆகலாமோ? எ-று.

     (வி - ம்.) வாடல - வாடுதலையுடையன; உடன்பாட்டுக் குறிப்பு வினைமுற்று; வருடை - வரையாடு. தெய்வமேறிய மலைத்தழையை வாடச் செய்துவிடின் அத் தெய்வம் ஏதம் நிகழ்த்தினுமாமென்று அஞ்சுவித்தது.

     உள்ளுறை :-சேதா காந்தளந்தாது மூடப்படுதலால் அதன் நிறம் வேறுபடக் கண்ட கன்று மருளாநிற்கும் என்றது; தலைவி நாண முதலியவற்றான் மூடப்பட்டுக் கருத்து வேறாதலைக் கண்ட தோழி மயங்கா நின்றாள் என்பதாம். இவ்வுள்ளுறை கொண்டு, தலைவி நாண முதலாயவற்றால் மூடப்பட்டாளென்று துறைக்குறிப்பி லுரை கூறலாயிற்று.

     மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்- குறை நயப்பித்தல்.

     (பெரு - ரை.) கேளுடைக் கேடு என்றது அவன் இறந்துபடுவான் என்னும் கருத்துடையது. இனிச் சிலம்பின் மேய்ந்த ஆவின்மேல் தாதுகுதலாலே அதன்கன்று அதனை மருளும் என்றது; இத் தழையாடையை யாம் உடுப்பின் அன்னை ஐயுறா நிற்பள் என்றவாறாம். "வருடையும் பாயாச் சூருடையடுக்கத்த" என்றது தழை கொய்து வந்த அருமையை விளக்கியது.

(359)