பக்கம் எண் :


618


(தொல். கள. 22) என்னும் விதியினால் இது தோழிக்குக் கூறியது, என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

(365)
  
     திணை : பாலை.

     துறை : இஃது, உலகியல்கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வந்தவிருந்தினரை ஓம்புவது இல்லறநெறியாயினும் அது தான் பொருளின்றி எவ்வாறியலுமாதலிற் பொருள்வயிற் பிரியவேண்டுமென்ற நெஞ்சினைத் தலைமகன் நெருங்கி நெஞ்சமே! அங்ஙனம் நீ பொருள் ஈட்டிவரினும் இல்லறம் நிகழ்த்தற்பாலள் மனைவியேயன்றோ? அவளிறந்துபடுமாறு விடுத்தகலுதல் தகுதியோ? அவள் வாடையால் வருந்தி மாய விடுத்தகலுவோர் மடமையுடையரெனக் கடிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேற்று நாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ் 
    
வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும் 
    
திருந்திழை அல்குல் பெருந்தோள் குறுமகள் 
    
மணியேர் ஐம்பால் 1 மாசறக் கழீஇக் 
5
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி  
    
மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த 
    
இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் 
    
வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி 
    
முதுக்குறைக் குரீஇ முயன்றுசெய் குடம்பை 
10
மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும் 
    
வடபுல வாடைக்குப் பிரிவோர் 
    
மடவர் வாழியிவ் வுலகத் தானே. 

     (சொ - ள்.) அரவுக் கிளர்ந்து அன்ன பல் விரவுறு காழ் வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல் - நெஞ்சமே! பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலையணிந்த, நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகிலினுள்ளால் வந்து தோன்றி விளங்குகின்ற திருந்திய இழையணிந்த அல்குலையும்; பெருந் தோள் குறுமகள் - பெரிய தோளையுமுடைய இளமடந்தையின்; மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ - நீலமணி

 (பாடம்) 1. 
மாசறக்கெழீஇக்.