பக்கம் எண் :


620


     (இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதனாற் கொள்க.

    
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை 
    
நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து 
    
கருங்கண் கருனைச் செந்நெல்வெண் சோறு 
    
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால் 
5
கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும் 
    
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி 
    
மெல்லியல் அரிவைநின் பல்லிருங் கதுப்பிற் 
    
குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத் 
    
தளையவிழ் அலரித் தண்நறுங் கோதை 
10
இளையருஞ் சூடி வந்தனர் நமரும் 
    
விரியுளை நன்மா கடைஇப் 
    
பரியாது வருவர்இப் பனிபடு நாளே. 

     (சொ - ள்.) கொடுங் கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை - வட்டமாகிய கண்களையும் கூரிய வாயையும் உடைய காக்கைப் பேடை; நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ - நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டு; கிளை பயிர்ந்து - சுற்றத்தையும் விளித்து; கருங் கண் கருனைச் செந் நெல் வெள்சோறு சூர் உடைப் பலியொடு கவரிய - கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத் திரளையைத் தெய்வத்துக்கிடும் பலியுடனே கவர்ந்து கொள்ளுமாறு; குறுங் கால் கூழ் உடை நல் மனைக் குழுவின இருக்கும் - குறிய கால் நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய நல்ல மனையின்கண்ணே கூடினவாயிருக்கும்; மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி - பழைமையான வீடுகளையுடைய அருமன் என்பவனது பெரிய புகழ் பொருந்திய சிறுகுடி என்னும் ஊரிலிராநின்ற; மெல் இயல் அரிவை - மெத்தென்ற சாயலையுடைய அரிவையே!; நின் பல் இருங் கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் தளை அவிழ் அலரி - நினது பலவாகிய கரிய கூந்தலிற் சூடிய மாலை போலக் குவளை மலரொடு இடையிட்டுத் தொடுத்த நறிய பூவையுடைய முல்லையின் மூட்டுவாய் அவிழ்ந்த மலராகிய; தண் நறுங் கோதை - தண்ணிய நன்மணமுடைய பூமாலையை; இளையரும் சூடி வந்தனர் - உடன் சென்றிருந்த வீரரெல்லாருஞ் சூடி வந்தனர்; இப் பனி படு நாள் நமரும் பரியாது - அதனால் இப் பனி மிக்க பருவத்திலேதானே நங்காதலரும் ஆண்டுத் தங்கி வருந்தாது; விரி உளை நல் மா