(து - ம்.) என்பது, தலைமகள் களவின்கண்ணே தன்னை இல்வயிற் செறிப்பரென்று அஞ்சி வருந்தலும் அதுகண்ட தோழி, நீ துறைவன் வந்து முயங்குமாறு விரும்பி வருந்தியதனை இவ்வூர் நோக்கிப் பிறிதொன்றாகக் கருதி அன்னை கொடுத்த கோடு உலைந்ததற்கு வருந்தாதேயென்று கூறாநிற்கும்; ஆதலால் நின்னை இல்வயிற்செறிப்பாரல்லர்; நீ வருந்துவது தகுதியுடையது அன்றென அவள் ஆற்றுமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| அழிதக் கன்றே தோழி கழிசேர்பு |
| கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம |
் | வள்ளிதழ் நெய்தல் வருந்த மூக்கிறுபு |
| அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக் |
5 | கிளைக்குருகு இரியுந் துறைவன் வளைக்கோட்டு |
| அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட |
| அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி |
| அன்னை தந்த அலங்கல் வான்கோடு |
| உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு |
10 | இனையல் என்னும் என்ப மனையிருந்து |
| இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர் |
| திண்திமில் விளக்கம் எண்ணுங் |
| கண்டல் வேலிக் கழிநல் லூரே. |