பக்கம் எண் :


65


துயிலாதொழிந்தனம்; அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி இ அழுங்கல் ஊர் - பழிதூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியராற் கூறப்படும் அம்பலொடு சேர ஒலிமிக்க இவ்வூர்; புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து ஆனாக் கௌவைத்து ஆக என் இழந்தது யாமத்து - மேன்மையில்லாத தீய சொற்களைக் கூறுதற்கு வேண்டிய உரைகளை ஏறட் டெடுத்துக்கொண்டு அமையாத பழி மொழிமையுடையதாக எம்மைப்போல் எதனை இழந்தது? இந் நடுயாமத்திலும் துயின்றிலதே; எ - று.

    (வி - ம்.)ஏற்றை - விலங்கி னாண்பாற்பெயர். புரை-மேன்மை. கௌவை - பழிச்சொல். அழுங்கல் - ஒலி.

    தலைவன் ஒருசிறைப்புறத்தானென அறிந்த தோழி அவன் குறித்த பொழுது வாராமையாலே தலைவி நலனிழந்தமையும், ஏதிலாட்டியர் அலரெடுத்தமையும், ஊரார் பழிதூற்றுதலும், ஊர் கண்ணுறங்காமையால் இரவுக் குறியின் முட்டுப்பாடுங் கூறி வரைவுகடாய தறிக. ஊருறங்காமை கூறியது முட்டுவயிற்கழல். நலனிழந்தனமென்றது பசலைபாய்தலை.

    உள்ளுறை :-பிடி புலம்புமாறு புலியானது களிற்றைத் தாக்கிக் கொல்லா நிற்கும் நாடனென்றதனால் இரவு இந் நெறியின்கண் வரின்யாம் புலம்புமாறு எமர் நின்னை ஏதஞ்செய்யா நிற்பர் என்றதாம்; இதனாலும் இரவுக்குறி மறுத்து வரைவுடம்படுத்தியதறிக, மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த அச்சம். பயன் -வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) வெற்பன்சொல் தேறி யாம் எம் நலம் இழந்தனம் அதனால் யாமத்தும் துயில்கின்றிலேம். ஊர் என் இழந்தது இவ்வியாமத்தும் துயிலாதே கௌவைத்தாக என யாமத்து என்பதனை ஈரிடத்தும் இயைத்துக்கொள்க. துயில்கின்றிலேம், துயிலாதே என்பன சொல் லெச்சத்தாற் போந்தன.

(36)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது வரைவிடைவைத்துப் பிரியுந் தலைமகன் யான் வருமளவும் தலைவியை ஆற்றியிருவென்றாற்கு நீ இவளையும் உடன் கொண்டு செல்வாயாக, அன்றிப் பிரிந்துசென்றால் கார்காலத்து மாலைப்பொழுதில் இவள் படுந் துன்பம் என்னா லாற்றுவிக்குந் தரத்ததன் றெனத், தோழி மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு அவன் "விலங்குறினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை 
    
உணங்கூ ணாயத் தோரான் தெண்மணி