(து - ம்,) என்பது, வரைந்தெய்துமாறு கருதிய தலைமகன் பொருளீட்டச் சென்று நீட்டித்தலாலே தலைமகள் வருந்துமெனக் கவன்ற தோழியை, அங்ஙனம் நீட்டித்தான் மீண்டுவந்து ஒருசிறை உறுவானாதலை அறிந்த தலைமகள் நோக்கித் துறைவன் என்னைப் பிரிந்தானென்பதன்றி அவன் என் னுள்ளத்தினின்று நீங்க அறியானாதலின், என் நெற்றியிற் பசலை எவ்வாறுண்டாமெனத் தேற்றித் தான் கூறும் உள்ளுறையைக் கேட்ட தலைமகன் விரைந்து வரையுமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் .............. தானே கூறும் காலமு முளவே" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.
துறை : (2) மனையுள் வேறுபடாது ஆற்றினாயென்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.