பக்கம் எண் :


653


     அவனது உயர்வுந் தனது தாழ்வுந்தோன்றச் சிறிய நெஞ்மென்றாள். காதலன் கையகன்றதனால் செயலறவுகொண்டு அவனைக் கருதியுறைகின்றே னெனவும். அங்ஙனங் கருதுவதொன்றனால் என் நுதலின் பசலை நீங்குவதன்றி அவன் வந்து முயங்கலான் நீங்குவது கண்டிலேனெனவுங் கூறினாளாயிற்று.

     உள்ளுறை:- பரதவர் திமிலொடு சென்று மீன்பிடித்துக் கானலின்கண்ணே குவித்துப் புன்னையி னிழலிலிருந்து கிளையொடு தேறலை மாந்தி மகிழுந் துறையென்றது, தலைமகன் தேரொடு வேற்றுநாட்டுச் சென்று பொருளீட்டிவந்து முன்றிலிலே குவித்து எம்மனைக்கட் சுற்றத்தாரொடு மகிழ்ந்து என்னை மணந்து எனது நலனை நுகர்ந்து மகிழ்வானாக வென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - வரைவுடன் படுத்தல்.

     (பெரு - ரை.) அகல்வு அறியான் ஆதலின் பசப்பு யாங்கு ஆகின்று? எனக் கூட்டுக.

(388)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, பகற்குறிவந் தொழுகா நின்றகாலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, தலைமகன் வரையாது பகற்குறிவந் தொழுகுகின்றான் அறிந்து விரைய மணஞ்செய்துகொள்ளுமாறு தோழி தலைவியை நெருங்கி, நம் அன்னை என்னை நோக்கி, நுந்தை வேட்டை மேற் சென்றதனாலே தினைப்புனங்காப்பு நினதேயென்றனள்; அவ்வாறு காவல்செய்யும்பொழுது மலைநாடனொடு தொடர்புற்றோம்; தினைகொய்யுங்காலம் நெருங்கினமையின் அவனோ டுற்ற தொடர்பு தான் யாதாய் முடியுமோ என நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும்..............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
வேங்கை யும்புலி ஈன்றன அருவியும் 
    
தேம்படு நெடுவரை மணியின் மானும 
    
அன்னையும் அமர்ந்துநோக் கினளே என்னையும் 
    
களிற்றுமுகந் திறந்த கல்லா விழுத்தொடை 
5
ஏவல் இளையரொடு மாவழிப் பட்டெனச் 
    
சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் 
    
காவல் இனியென் றோளே சேவலொடு 
    
சிலம்பில் போகிய சிதர்கால் வாரணம் 
    
முதைச்சுவல் கிளைத்த பூழி மிகப்பல