பக்கம் எண் :


657


     திணை : பாலை.

     துறை : (1) இது, பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

     (து - ம்,) என்பது, தலைமகன் தான் பொருள்வயிற் பிரிவே னென்றதை யறிந்து வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி, மடந்தாய்! கண்ணீர் மல்க அழாதே கொள்; நின் காதலர் ஏழில்மலையைப் பெறுவதாயினும் நின்னைப் பிரிபவர் அல்லர்; நீ அழுவதனை அவர் கண்டால் இன்னே செலவழுங்குவரென வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற் கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.

     துறை : (2) வரைவுணர்த்தியதூஉமாம்.

     (து - ம்,) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்பொறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே 
    
புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பின் 
    
பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின் 
    
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை 
5
ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும் 
    
பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு 
    
ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் 
    
யாரோ பிரிகிற் பவரே குவளை 
    
நீர்வார் நிகர்மலர் அன்னநின் 
10
பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே. 

     (சொ - ள்.) மடந்தை குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன நின் பேர் அமர் மழைக் கண் தெள் பனி கொளவே ஆழல் - மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; பொருள்வயின் செலவு அழுங்குவர் - அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலிப்பொறி அன்ன புள்ளி அம் பொதும்பில் - புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர்தலைக்கார்