(து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறி வேண்ட, அதற்கு நேர்ந்த தோழி தலைவிபால் வருதலும் ஆங்கு ஆயம் பல அருகி லியங்குதலானே புலப்படக் கூறாது நம் காதலர் மிக்க அன்பினராதலின் நடுயாமத்து யாம்படுகின்ற துன்பத்தைப் போக்குதலுஞ் செய்வர்; அத்தகையார் இப்பொழுது முன்புற்ற பகற்குறியை வந்து நோக்கி வருந்தியிருக்கின்றனர் போலும்; அவர் நமது மாளிகையை அறிந்திருப்பாராயின் அது மிக்க நலம் எனக் கண்ணாலே குறிப்பாகக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
துறை : (2) வரைவுநீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவுணர்த்தி வற்புறுத்தியதூஉமாம்.