70
வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாறு வேழத்து இன்தலை மருப்பு ஏய்ப்ப - புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்ணே கதவ அல்ல - கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; அவை மட்டுமல்ல ! நண்ணார் அரண் தலை மதிலர் ஆகவும் - பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; முரசு கொண்டு ஓம்பு அரண் கடந்த போர்அடு செழியன் - உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரும் பெயர்க் கூடல் அன்னநின் கரும்பு உடைத் தோளும் - பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண் !; எ-று. (வி - ம்.)கரும்பு - காமனது வில்; தொடர்புடைமையில் தழீஇக் கொண்டு கூறப்பட்டது. முகமிறைஞ்சி நாணக்காண்டலிற் றன்கூற்றை ஏற்றுக்கொண்டிலள் போலுமெனக் கொண்டு எதிர்கொள்ளாது வெறுத்தனையென்றான். தாங்குதலெளிதோ என்றது நீ வெறுத்தனையெனினும் காமந்தாங்குத லெளிதன்றாதலின் மேல்வீழ்ந்து முயங்குவேனென்றதாம். கண்ணுந் தோளுங் கதத்தன வென்றது, அவை என்னை வருத்தாவாறு கண்ணால் நயந்து நோக்கித் தோளா னணைத்து முயங்குகவென்றதாம். மற்றும் இதனுள் தழீஇக் கொண்ட தென்றது மெய்தொட்டுப் பயிறலும், சில கூறில் என்றது பொய் பாராட்டலும், நாணுதியென்றது இடையூறு கிளத்தலும், தாங்குதலெளிதோவென்றது நீடு நினைந்திரங்கலும், புலியிடைத் தோய்ந்து சிவந்த மருப்புப்போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணென்றது கூடுதலுறுத்தலுங் கூறியவாறறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாமை யுணர்த்தல். (பெரு - ரை.) யாழ : அசைச்சொல். கதுமென: விரைவுக் குறிப்பு. புலி நடுங்கக் குத்தி விளையாடிய வேழத்தின் மருப்புத்தலை ஏய்ப்ப என இயைத்துக் கொள்க.(39) 40. கோண்மா நெடுங்கோட்டனார் திணை : மருதம். துறை : இது, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. (து - ம்.) என்பது, தலைமகன் பரத்தையிற் பிரிந்த காலத்துத் தலைவி பொறையுயிர்த்து விடுத்த வெள்ளணிகண்டு பெயர்ந்து தலைவி
வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாறு வேழத்து இன்தலை மருப்பு ஏய்ப்ப - புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்ணே கதவ அல்ல - கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; அவை மட்டுமல்ல ! நண்ணார் அரண் தலை மதிலர் ஆகவும் - பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; முரசு கொண்டு ஓம்பு அரண் கடந்த போர்அடு செழியன் - உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரும் பெயர்க் கூடல் அன்னநின் கரும்பு உடைத் தோளும் - பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண் !; எ-று.
(வி - ம்.)கரும்பு - காமனது வில்; தொடர்புடைமையில் தழீஇக் கொண்டு கூறப்பட்டது.
முகமிறைஞ்சி நாணக்காண்டலிற் றன்கூற்றை ஏற்றுக்கொண்டிலள் போலுமெனக் கொண்டு எதிர்கொள்ளாது வெறுத்தனையென்றான். தாங்குதலெளிதோ என்றது நீ வெறுத்தனையெனினும் காமந்தாங்குத லெளிதன்றாதலின் மேல்வீழ்ந்து முயங்குவேனென்றதாம். கண்ணுந் தோளுங் கதத்தன வென்றது, அவை என்னை வருத்தாவாறு கண்ணால் நயந்து நோக்கித் தோளா னணைத்து முயங்குகவென்றதாம். மற்றும் இதனுள் தழீஇக் கொண்ட தென்றது மெய்தொட்டுப் பயிறலும், சில கூறில் என்றது பொய் பாராட்டலும், நாணுதியென்றது இடையூறு கிளத்தலும், தாங்குதலெளிதோவென்றது நீடு நினைந்திரங்கலும், புலியிடைத் தோய்ந்து சிவந்த மருப்புப்போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணென்றது கூடுதலுறுத்தலுங் கூறியவாறறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாமை யுணர்த்தல்.
(பெரு - ரை.) யாழ : அசைச்சொல். கதுமென: விரைவுக் குறிப்பு. புலி நடுங்கக் குத்தி விளையாடிய வேழத்தின் மருப்புத்தலை ஏய்ப்ப என இயைத்துக் கொள்க.
துறை : இது, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.