பக்கம் எண் :


700

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
சாந்தம் - சந்தனம்
சாந்து - சந்தனமரம்
சாயல் - மென்மை
சாயல்மார்பு - மெத்தென்ற மார்பம்
சாயினை - இழைத்தனை
சாய் - கோரை
சாய்தல் - குறைதல்
சாறு - திருவிழா
சிதர் - வண்டு
சிதர்கால் - மெல்லிய கால்
சிதர்தல் - கிளைத்தல்
சிதலைத்தோடு - கறையான் கூட்டம்
சிரல் - கிச்சலி
சிரல் - கிச்சிலிப் பறவை
சிலம்பி - சிலந்திப்பூச்சி
சிலவித்து அகலவிட்டு - சில வாயவிதைகளைக் கலப்பாக விதைத்து
சிலை - ஒலிக்கின்ற
சில்ஓதி - சிலவாகிய கூந்தலையுடையவள்
சினை - சிலம்பின் வயிற்றிலிருந்து வரு நூலாலே அது கோட்டை செய்யப்படுதலால் சினை என்றர்
சிள்வீடு - ஒருவகை வண்டு
சிறுகுபு - சிறுகி
சிறுதடி - உப்புப்பாத்தி
சிறுபுறம் - முதுகு
சிறுமனை - சிற்றில்
சிறுமை - தடுமாற்றம், நோய்
சிறைப்பிள்ளை - சிறகையுடைய பிள்ளை
சீர் - தாளவறுதி
சுடர் - விளக்கு
சுணங்கு - தேமல்
சுரன்முதல் - சுரத்தினிடத்தில்
சுரிதகம் - திருகுபூப்போல அக்காலத்துப் பயின்றதோர் அணி
சுவல் - தோள்மேல்
சுவல் - பிடர்
சுவல் - மேட்டுநிலம்