பக்கம் எண் :


699

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
கொடுங்கால் - வளைந்த தாள்
கொடுந்திமில் - வளைந்த மீன் படகு
கொடுமூக்கு - வளைந்த மூக்கு
கொட்பு - சுழற்சி
கொண்டல் - கீழ்காற்று
கொண்டி - கொள்ளைகொள்ளும் பரத்தை
கொம்மை - இளமை
கொருவுதல் - குற்றுதல்
கொழுதல் - கொய்தல்
கொழுதுதல் - கோதுதல்
கொள்ளை - மிகுதி
கொள்ளை - விலை
கொள்ளைசாற்றி - விலைகூறி
கொன் - பயனின்மை
கோடல் - காந்தள்
கோடல் கண்ணி - கொய்து கொண்டு போதலைக் கருதி
கோடியர் - ஊதுகொம்பு உடையவர்
கோடு - கொடுமுடி
கோடு - கொம்பு என்னும் வாச்சியம்
கோடு - மீன் உணக்குங்கோல்
கோடை - மேல்காற்று
கோட்சுறா - கொள்ளும் தன்மையுள்ள சுறாமீன்
கோட்டம் - மாறுபாடு
கோட்டிய - வளைத்த
கோட்டுமா - பன்றி
கோண்ஏர் எல்வளை - வளைந்த அழகிய ஒளியை உடைய வளையல்
கோதை - மலர்மாலை
கோல் - திரட்சி
கோல்நேர் - கோற்றொழில் அமைந்த
கோள் - காய்
கோள் - கொலை
கோள்உதிர் - கொல்லவல்ல நகம்
கோள்வல் - கொல்லவல்ல
கௌவை - பழிச்சொல்ல
சகடம் - வண்டி